2nd Semi: ENGvAUS; அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம் | தினகரன்

2nd Semi: ENGvAUS; அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகின்றன.

இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியாவும் - மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் மோதுகின்றன.

இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது அவுஸ்திரேலியாவா? இங்கிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சமபலத்தடன் திகழும் அவுஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. அவுஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணி இதற்கு முன்பு 1975, 1987, 1996, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

ஆஸ்திரேலிய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து இருந்தது.

இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.

இங்கிலாந்து அணி லீக் ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

அவுஸ்திரேலியாவை விட பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கூடுதல் பலத்துடன் இங்கிலாந்து திகழ்கிறது.

கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தானை போல அவுஸ்திரேலியா- இங்கிலாந்து பரம்பரை எதிரிகள் ஆகும்.

இதனால் இரு அணிகளும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாக போராடுவார்கள். இதனால் 2-வது அரை இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...