காலை உடற்பயிற்சியே நன்மை தரும் | தினகரன்


காலை உடற்பயிற்சியே நன்மை தரும்

காலை உடற்பயிற்சியானது, புத்துணர்ச்சியுடனும் உடலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் உதவுவதோடு மாத்திரமின்றி, சருமத்தையும் முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவுகின்றது.

எம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் காலை உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா மூலமும் உடற்பயிற்சி நிலையத்திலும் சென்று செய்யலாம். இவ்வாறு காலை வேளையில் செய்யும் உடற்பயிற்சியானது. உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, எமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகின்றது.

காலை உடற்பயிற்சியானது ஹோர்மோன்களை தூண்டி, விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றது.

அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்குகின்றது.

காலை உடற்பயிற்சியை தினமும் பழக்கப்படுத்திக்கொண்டால், ஏதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை வேளையில்  விழிப்பு ஏற்பட்டு விடும். அத்தோடு காலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல உறக்கத்திற்கும் உதவுகின்றது.

காலை உடற்பயிற்சியோடு மாத்திரம் நின்றுவிடாது, சீரான உணவுப் பழக்கவழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.  சீரான உணவு உட்கொள்ளும் முறை என்பது இதன் மூலம் ஏற்படும் நன்மைகளில் ஒன்று. செரிமானம் மற்றும் நல்ல உடல் செயற்பாட்டை ஏற்படுத்துகின்றது. 

தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டால்,அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட, காலை வேளையில் அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகின்றது.

மேலும், காலைப்பொழுதே அனைவருக்கும் உடற்பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்துகை போன்ற பிரச்சினைகள் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...