ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது | தினகரன்

ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்து நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 02 கிலோ 85 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 07 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...