பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளால் வாழ்க்ைக சிறப்படையும் | தினகரன்

பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளால் வாழ்க்ைக சிறப்படையும்

உலக சனத்தொகை தினம் இன்று

உலக சனத்தொகை தினம் ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்டு வருடம் தோறும் ஜூலை 11ம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெருகி வரும் உலக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக மக்கள் தொகை தினம் மிகப் பெரிய அளவில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.இந்த முன்னெடுப்பின் முதன்மையான நோக்கம் மக்களிடையே இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதே ஆகும்.உலகெங்கும் தினமும் குழந்தையைப் பிரசவிக்கும் போது சுமார் 800 பெண்கள் மரணமடைகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே, இன்றைய நாளின் முக்கியத்துவம் குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் பெண்களது இனப்பெருக்க ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்க வேண்டும் என்பதையும் அதிக அளவிலான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

உலக மக்கள் தொகை தினம் என்பது விழிப்புணர்வுக்கான நாள் ஆகும். மக்கள் தொகை பிரச்சினைகளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள உதவும் நாள்.மக்கள் தொகையினால் உருவெடுக்கும் பிரச்சினைகள் என்பது குடும்பக் கட்டுப்பாடு, மனித உரிமைகள், சுகாதார உரிமை, குழந்தைகளின் உடல்நலம், பாலின சமத்துவம், குழந்தைத் திருமணம், கருத்தடை பயன்பாடு, பாலியல் கல்வி, பாலியல் நோயைப் பற்றிய அறிதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

உலக மக்கள் தொகை தின இளம் ஆண், பெண் இருவரையும் வலுப்படுத்தவே கொண்டாடப்படுகிறது.இளம் வயதிலேயே அவர்களுக்குத் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கு சரியான வழிமுறைகளைப் பற்றி கற்பிக்க வேண்டும்.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரம்ப கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்துதல் அவசியம். சமூகத்தில் இருக்கும் பாலின முரண்பாடுகளை அகற்ற மக்களுக்கு கற்றுக் கொடுத்தல். பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தல் மற்றும் அவை எப்படித் தடுக்கப்படலாம் என்பதைப் பற்றி கற்பித்தல்.

ஒவ்வொரு தம்பதியருக்கும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதிப்படுத்துவது.பெண் குழந்தையின் உரிமைகளை பாதுகாக்க தேவையான சட்டங்களை ஏற்படுத்துதல்.

அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு இந்நாள் முன்னெடுக்கப்பட்டது. 11 ஜூலை 1987 ஆம் தேதியாகிய அன்று உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே இந்நாளை ஏறெடுக்கத் தூண்டியது. தற்போதைய உலக மக்கள் தொகை 760 கோடியைத் தாண்டி விட்டது. ஐ.நா.வின் அறிக்கையின்படி இது 2030-இல் 8.6 கோடியை எட்டும் என்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய உலக மக்கள் தொகையுடன் 8.3 கோடி மக்கள் இணைக்கப்படுகின்றனர். உலகின் மக்கள் தொகை மிகுந்த நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் மக்கள் தொகை முறையே 140 கோடி மற்றும் 130 கோடியாகும். இவை முறையே உலக மக்கள் தொகையின் 19% மற்றும் 18% ஆகும். இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024இல் இந்தியா சீனாவை மிஞ்சும் எனறு கணக்கிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பான தன்னார்வ குடும்பக் கட்டுப்பாட்டை அணுகுவது மனித உரிமை ஆகும். ஆனால், வளரும் நாடுகளில் உள்ள கர்ப்பத்தை விரும்பாத 21.4 கோடி பெண்களால் பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை. தகவல் மற்றும் சேவைகளைப் பெற முடியாமை அல்லது பெற்றோர் மற்றும் சமுதாய ஆதரவு இன்மை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதும் பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கத் தேவையானவைகள் ஆகும். இதன் மூலம் சமுதாய சுகாதாரத்தையும் வளர்ச்சியையும் பேணிக் காக்க முடியும்.


Add new comment

Or log in with...