ஐரோப்பிய ஒன்றிய தீவிரவாத தடுப்பு இணைப்பாளர் இலங்கை விஜயம் | தினகரன்


ஐரோப்பிய ஒன்றிய தீவிரவாத தடுப்பு இணைப்பாளர் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான இணைப்பாளர் Gilles de Kerchove இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது மாலைதீவுக்கும் அவர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

நாளை (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அவரது விஜயம் இடம்பெறவுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளுதல் தொடர்பில் உரிய பின்புலத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவரது விஜயத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...