''மக்கள் சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கும் ஊடக கலாசாரமே அவசியம்'' | தினகரன்


''மக்கள் சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கும் ஊடக கலாசாரமே அவசியம்''

சில சம்பவங்களை வைத்துக்கொண்டு மக்களை தூண்டிவிடும் செயற்பாட்டை முன்னெடுக்காது, மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுக்கும் ஊடகக் கலாசாரமே நாட்டின் தேவையாகுமென ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரசிங்ஹ தெரிவித்தார். சில ஊடகங்கள் இனவாதம் மதவாதத்துக்குள் அகப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்களை அதற்குஇனவாதத்துக்குள் தூண்டிவிடும் ஊடகக் கலாசாரமன்றி மக்கள் சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கும் ஊடகக் கலாசாரமே அவசியமென் றும் அவர் தெரிவித்தார்.  

இலங்கை பத்திரிகை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் சிறப்பதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

நாட்டில் தகவல் அறியும் சட்டம் நடைமுறையிலுள்ளது. இதற்கிணங்க வருடாந்தம் 12,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.இது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.நாட்டில் உயர் கல்வி கற்கும் 1,75,000 மாணவர்கள் சித்திபெறுகின்ற போதும் 30,000 பேரே பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகின்றனர்.  ஏனையோருக்கு பல்கலைக்கழகக் கல்விக்கான தகைமை இருந்தும் வாய்ப்புகள் இல்லாமலுள்ளன. கல்வித்துறை இதுதொடர்பில் சிந்தித்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்   


Add new comment

Or log in with...