மனிதக் கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் | தினகரன்


மனிதக் கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில்

மனிதக் கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.

மனிதக் கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் தமிழகம் 144 உயிரிழப்புகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். தனிநபர் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். இவ்விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ,

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரம் வேதனை அளிக்கிறது. மனிதக்கழிவுகளை அகற்றும் பணியின் போது தமிழகத்தில் இதுவரை 144 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் தருகிறது. மனிதக்கழிவுகளை இனிமேல் மனிதன் அகற்றக் கூடாது என்கிற நிலையை பழனிசாமி அரசு தமிழகத்தில் விரைந்து உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...