யாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு | தினகரன்


யாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு

யாழ்.தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.

இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை பார்வையிடுவதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருகைதருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இம் மாதக் கடைசியில் தீவகத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. மேற்குறித்த பறவைகள் 3000மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜீரியா, சைபீரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. 23க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர். இதில் நாரை, அன்னப்பறவை உள்ளிட்ட வெளிநாட்டு பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...