Thursday, April 25, 2024
Home » 2024-2025 ஹிந்தி மொழி கற்பதற்கான புலமைப்பரிசில்

2024-2025 ஹிந்தி மொழி கற்பதற்கான புலமைப்பரிசில்

- விமான டிக்கெட், உதவித்தொகை, தங்குமிடம், வருடாந்த புத்தகக் கொடுப்பனவு

by Rizwan Segu Mohideen
January 17, 2024 6:40 pm 0 comment

– விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக விபரம் இணைப்பு

இலங்கை பிரஜைகள், ஆக்ராவில் உள்ள ஹிந்தி மத்திய நிலையத்தில் 2024-2025 கல்வி ஆண்டில், ஹிந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப்பரிசில்களை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டமானது, முழுமையான நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசிலாகும்.

இதில் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரு வழி விமான டிக்கெட், உதவித்தொகை, தங்குமிடம், வருடாந்த புத்தகக் கொடுப்பனவு ஆகியவை வழங்கப்படும்.

21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களில் ஹிந்தி மொழியினை ஆரம்ப/இடைநிலை மட்டத்தில் பயின்றவர்கள் இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினைக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் 2024 பெப்ரவரி 26 ஆம் திகதி மு.ப. 10.00 முதல் பி.ப. 1.00 மணி வரை, கொழும்பு 07 கிரகரிஸ் வீதி இலக்கம் 16/2 இல் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் (இந்திய கலாசார நிலையம்) நடைபெறும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு கோரப்படுகின்றீர்கள்.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: hcicolombo.gov.in/what

Applications-for-Scholarship-for-studying-Hindi-in-India-2024-2025

கொழும்பில் உலக ஹிந்தி தினம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT