Saturday, April 20, 2024
Home » 3ஆம் தவணைக்கான பாடசாலை பெப்ரவரியில் ஆரம்பம்

3ஆம் தவணைக்கான பாடசாலை பெப்ரவரியில் ஆரம்பம்

- A/ L மீள் பரீட்சையால் திகதியில் மாற்றம்

by Prashahini
January 17, 2024 12:12 pm 0 comment

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 3ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான 3ஆம் தவணை பாடசாலை விடுமுறை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஜனவரி 31ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்ததோடு, பெப்ரவரி 01ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் A/ L விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றை இவ்வருடம் மீள நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் எடுத்த தீர்மானம் காரணமாக, பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

விவசாய விஞ்ஞான வினாத்தாள் இரண்டாம் பாகம் வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து அதனை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

பின்னர் வினாத்தாளின் முதலாம் பாகத்தை இரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி,  விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 01ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 முதல் 11.40 வரை மீண்டும் நடைபெற உள்ளது.

முதல் பாகம் அதே நாள் பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Date: 01 February 2024

Time:
08:30 a.m. to 11:40 a.m. – Paper II
01:00 p.m. to 03:00 p.m. – Paper I

பாடசாலைகளுக்கு 40 நாட்கள் விடுமுறை

A/L பரீட்சை அனுமதி அட்டையில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் நீடிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT