சூப் குடிங்க, நோய்களுக்கு bye bye சொல்லுங்க! | தினகரன்


சூப் குடிங்க, நோய்களுக்கு bye bye சொல்லுங்க!

திண்ம உணவுகளைவிட திரவ உணவுகளே எக்காலத்திற்கும் ஏற்றது. திரவ வகையிலான உணவுகள் எளிதில் ஜீரணமாகும் என்பதோடு உடலுக்கும் எவ்வித தொந்தரவையும் தராது. கோடை காலங்களில், அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் இந்தமாதிரி காரணத்தினால் தான்.

கோடை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்றது சூப். இந்த சூப்பை காய்கறிகள், மூலிகைகள், இறைச்சி மற்றும் மற்ற ஆரோக்கிய பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம். இது உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

சூப்பில் அன்ரிஒட்ஸிஜண் இருப்பதால் தினமும் கூட இதனை பருகலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில சூப் வகைகளை பார்ப்போம்.

பாசிப்பருப்பு கிவி சூப்: இதில் புரதம் அதிகமாக இருக்கிறது. கிவி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தேங்காயில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் அடங்கியிருக்கிறது. கிவியில் விட்டமின் சி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் ருசியும் அருமையாக இருக்கும்.

காலிஃப்ளவர் மற்றும் கார்ன் சூப்: காலிஃப்ளவரில் விட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கார்ன் மற்றும் காலிஃப்ளவரில் பாஸ்தா, பிட்சா மற்றும் சூப் தயாரித்து சாப்பிடலாம்.


Add new comment

Or log in with...