சியெட் டிரக், பஸ், ரேடியல் டயர்கள் சந்தையில் | தினகரன்


சியெட் டிரக், பஸ், ரேடியல் டயர்கள் சந்தையில்

பஸ்கள் டிரக்குகள் மற்றும் பிரைம் மூவர் ரக வாகனங்களுக்கென்றே உள்ளுர் நிலைமைகளோடு முற்று முழுதாக ஒத்துப் போகக் கூடிய வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கனரக அதி உயர் செயற்பாடு மிக்க ரேடியல் டயர்கள் சியெட் நிறுவனத்தால் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் டயர் தேவையில் சுமார் அரைவாசியை உற்பத்தி செய்யும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திருப்பு முனை உற்பத்தியாக அமைந்துள்ள இந்த உற்பத்திகள் வர்த்தக ரீதியாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டன. 

3 பில்லியன் ரூபா முதலீட்டுத் திட்டத்தின் ஒரு கட்டமாக 2018 ஜனவரியில் இந்தத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. டிரக் - பஸ் ரேடியல் அல்லது வுடீசு என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த முதலாவது உள்நாட்டு உற்பத்தி இலங்கையிலும் இந்தியாவிலும் பல மாதங்களாக தீவிர வீதிப் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது. களனியில் உள்ள சியெட் களனி உற்பத்தி வளாகத்தில் அமைந்துள்ள அதி நவீன உற்பத்தித் தொழிற்சாலையில் அதி நவீன இத்தாலிய இயந்திரங்களால் வடிவமைக்ப்பட்ட பின்னரே தீவிர வீதிப் பரிசோதனைக்கும் அது உற்படுத்தப்பட்டது. 

ஐரோப்பாவில் இருந்து தருவிக்கப்பட்ட மிகச் சிறந்த அதி நவீன இயந்திரங்கள் மூலம் உற்பத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ள இந்த டயர்கள் இலங்கையின் வர்த்தகப் பிரிவின் துரித மாற்றத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவை. ஏற்கனவே ரேடியல் டயர் வகைகளைப் பாவிப்பவர்களுக்கு இந்த உற்பத்தி செலவு ரீதியாகவும் ஈடுகொடுக்கக் கூடியது. உள்ளுர் பஸ் மற்றும் டிரக் டயர் சந்தையில் சியெட் உற்பத்திகள் ஏற்கனவே 65 வீத பங்கை கொண்டுள்ளன. அவற்றுள் 55 வீதமானவை இன்னமும் டீயைள-pடல டயர் வர்க்கத்தையே பாவிக்கின்றன.  டிரக், பஸ், ரேடியல் டயர்கள் வெளியீட்டு விழாவில் பேசிய சியெட் களனி ஹோல்டிங்ஸ் இன் தலைவர் சானக டி சில்வா குறிப்பிடுகையில், "சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஒரு வெற்றிகரமான கூட்டு முயற்சிக்கு உதாரணம். நமது உற்பத்தித்திறன் அதிகரித்தமை மட்டுமல்லாது, வழமையான நைலோன் டயர்களில் இருந்து நாம் இன்று தற்போது காணப்படும் உயர்தொழில்நுட்ப டயர்களை உற்பத்தி செய்கிறோம். வுடீசு டயர்களின் அறிமுகம், எமது நவீன கார் டயர்களும், சியெட் களனி ஹோல்டிங்ஸ் எந்தவொரு சர்வதேச டயர் உற்பத்தியாளர்களுக்கும் நிகரான டயர்களை உற்பத்தி செய்கின்றமைக்கு சான்றாய் அமைகின்றன". 

“இலங்கையில் TBR திட்டத்தில் நாம் செய்துள்ள முதலீடு கம்பனிக்கு மட்டும் அன்றி சந்தைக்கும் ஒரு பாரிய மைல் கல்லாகும். ஏனெனில் நாம் வர்த்தக ரீதியான ரேடியல் டயர்களை இந்தியாவில் காணப்படும் அதி உயர் தரத்துக்கு ஈடானதாக வழங்குகின்றோம்.  


Add new comment

Or log in with...