விற்பனைக்கு பிந்திய சேவைகளை உறுதிப்படுத்தும் Prestige Automobile | தினகரன்


விற்பனைக்கு பிந்திய சேவைகளை உறுதிப்படுத்தும் Prestige Automobile

BMW, BMWi, iPerformance மற்றும் MINI வாகனங்களின் ஏக இறக்குமதியாளரும் விநியோகத்தருமாக திகழும் Prestige Automobile பிரைவட் லிமிடெட், BMW வர்த்தக நாமத்தை உள்நாட்டில் பிரபல்யமடையச் செய்வதில் கடந்த 20 வருட காலமாக பெருமளவு பங்களிப்பு வழங்கியுள்ளது.

இக்காலப்பகுதியில்Prestige தனது BMW வாகனத் தெரிவுகளில் புதிய மாதிரிகளை அறிமுகம் செய்திருந்ததுடன், நவீன வசதிகள் படைத்த விற்பனைக்கு பிந்திய சேவை வசதி, சிறந்த விபத்து பழுதுபார்ப்பு நிலையம் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நிலைத்திருக்கும் உறவை கட்டியெழுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விற்பனைக்கு பிந்திய உயர்ந்த சேவைகளை வழங்குவதற்காக நிறுவனத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

புதிய 8 படிமுறை விற்பனைக்கு பிந்திய சேவை செயன்முறை பற்றி Prestige Automobile பிரைவட் லிமிடெட் பொது முகாமையாளர் லக்சிரி டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது சகல விற்பனைக்கு பிந்திய சேவைகளும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றன. BMW AG இனால் பின்பற்றப்படும் மூலோபாய திட்டமாக இது அமைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் சகல அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்களாலும் பின்பற்றப்படுகிறது.” என்றார். 

“இந்த படிமுறைகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது வாகனத்தின் பழுதுபார்ப்பு மற்றும் சேவை தேவைகள் பற்றிய தெளிவான தகவல்கள் பெற்றுக் கொடுக்கப்படும். வெளிப்படையான செயற்பாடுகளினூடாக, நம்பிக்கை மற்றும் தைரியத்தை வாகன உரிமையாளருக்கு சேர்க்கப்படுவதுடன், தன்னிறைவும், மனநிம்மதியும் ஏற்படுத்தப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் எமது நிபுணத்துவம், மற்றும் உலக சந்தைகளுக்கான அணுகல் போன்றவற்றினூடாக,BMW மற்றும் MINI வாகனங்களுக்கான விற்பனைக்கு பிந்திய சேவையை உச்ச கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிந்துள்ளதுடன், நவீன தொழில்நுட்ப உதவி மற்றும் அசல் உதிரிப் பாகங்கள் போன்றன வழங்கப்படுகின்றன. இலங்கையில் காணப்படும் ஒரே அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர் எனும் வகையில், உயர் தரம் வாய்ந்த சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதுடன், ஆலோசனைகளை வழங்குவது எமது இலக்காகும்.  


Add new comment

Or log in with...