4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான ஊழியர் கைது | தினகரன்

4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான ஊழியர் கைது

ரூபா 3.2 கோடி பெறுமதி

நான்கு கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றவர் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

40 தங்க பிஸ்கட்களை 10 பைகளில் பொதியிட்டு இரண்டு கால்களுக்குள் மறைத்துக் கொண்டு வந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய பிரதிப் பணிப்பாளர் விபுல மினுவன் பிட்டிய தெரிவித்தார்.

நான்கு கிலோ நிறையுடைய ரூபா 3.2 கோடி (ரூபா 32 மில்லியன்) கடத்த முயன்ற தங்க பிஸ்கட்டுகளே இவ்வாறு கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது.

கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர் இலங்கை விமானத்தில் பணிபுரியும் நபராவர். இவர் 23 வயதுடைய வத்தளையைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் சமன் ரணவன தலைமையின் கீழ் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...