விமான சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; அமைதியற்ற நிலை | தினகரன்

விமான சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; அமைதியற்ற நிலை

விமான சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; அமைதியற்ற நிலை-Katunayake-Airport Sri Lanka-Strike Continues-Tense


தங்களது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, விமான சேவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான பாதையை மூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று வருடத்திற்கு ஒரு முறை அதிகரிக்கப்படும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று (03) முதல், கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் இன்று (03) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் அமைதியற்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்ட பகுதியில், கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் நீர்த்தாரை தாக்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக, மத்தளை மற்றும் இரத்மலானை ஆகிய விமான நிலைய ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, ஶ்ரீ லங்கா சுதந்திர சங்கத்தின் பொருளாளர் டி.ஐ. பீரிஸ் தெரிவித்தார்.

(படங்கள்: குமாரசிறி பிரசாத்)

 


Add new comment

Or log in with...