சங்கீத சினிமா | தினகரன்


சங்கீத சினிமா

புதிய அலை இயக்குனரான ரோமரின் முதலாவது முழு நீளத் திரைப்படம் தான் The Sing of Leo கோடை காலத்தில் பாரிஸிற்கு வரும் ஒரு அமெரிக்கனின் நிலையாமை வாழ்வினை மிக நுணுக்கமாக வெளிப்படுத்திய படைப்பே இது.

மரபு ரீதியான சினிமா கட்டமைப்பினை உடைத்து புதிய கதையாடல்களையும், கவித்துவமிக்க காட்சியமைப்புக்களையும் புதிய அலை இயக்குனர்கள் சினிமாவிற்குள் புகுத்த தொடங்கினர். இவை பிரெஞ்சு சினிமாவில் இருந்தே தனக்கான பயணத்தினை ஆரம்பித்திருக்கிறது எனலாம். இடதுசாரி தீவிரத்தன்மை கொண்டதும் வலதுசாரியினரை கேலி, கிண்டல் செய்வதுமான படைப்புக்கள் பிரெஞ்சு சினிமாத் தளத்தினை விரிவு படுத்தி காத்திரமான பல விவாதங்களை மேற் கொள்ளக் கூடிய சினிமா நுகர்வோர் வட்டத்தினை உருவாக்கியது... 

புதிய அலை இயக்குனரான ரோமரின் முதலாவது முழு நீளத் திரைப்படம் தான் The Sing of Leo கோடை காலத்தில் பாரிஸிற்கு வரும் ஒரு அமெரிக்கனின் நிலையாமை வாழ்வினை மிக நுணுக்கமாக வெளிப்படுத்திய படைப்பே இது. சினிமா எனும் கோட்பாட்டினுள் நாம் பல்வேறு வகையான கலாசார விழுமியங்கள், பண்பாட்டு கூறுகள், சமூக கட்டமைப்புகள் போன்ற பல இன்னோரன்ன வாழ்வியல் செயற்பாடுகள் அனைத்தையும் காட்சியியல் ரீதியாக கண்டு இன்புறுகிறோம். அவ்வகை சமூக போக்கு சார்ந்த சினிமாக்கள் நுணுக்கமாக கையாளப்பட்டு இயக்கப்படுகின்ற போது, அவை நீட்சியான காலத்தினை வென்று, நிலைத்து நிற்கக்கூடிய படைப்பாக சமூக போக்கின் முன் காட்சியளிக்கும். The Sing of Leo மனித அலைதலின் விளைவினை விசித்திரமான கமரா கோணங்களுடன் காட்சிப்படுத்திய படைப்பாகும்.

மாறாக உலகியல் நடத்தையின் மீதான அனைத்துப் பார்வைகளையும், உலகியலினை மீறிய பிரமிப்புக்களையும் தன் வசம் புதைத்து வைக்காமல் திரையெங்கும் பரப்பிவிடுகின்ற அற்புதமான ஒளியமைப்பின் உயிரோட்டமான சினிமா. இவ்வாறான திரைப்படங்கள் வாழ்வின் மிக நுணுக்கமான பகுதிகளை வெளிப்படுத்துவதே. இவ்வாறான வெளிப்பாடுகள் பார்வையாளர்களின் மனதினில் நீங்காத இடத்தினை வகிக்கின்றபோது அதுவே ஒரு சிறந்த திரைப்படத்திற்கான அங்கீகாரத்தினை வழங்குகின்றது. சினிமாவினை எப்படியான அடிப்படையில் மனிதன் நுகர்கிறான் என்பது இன்னும் நிரூபிக்கப்படாத உண்மையாகவே இருக்கிறது... 

வித்தியாசமான வசனங்கள், நெறிப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்கள், கட்டமைக்கப்பட்ட கதை கூறும் முறைகள் என்பன திரைப்படங்களின் தனிப்பட்ட போக்கு. அவ்வாறான போக்குகள் சினிமாவாக பிரகடனப்படுத்தப்படுகின்ற போது அதற்கான ரசனை மேலும் அதிகரிக்கிறது என்றே கூறலாம். ஒவ்வொரு பார்வையாளனையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் அழகியலைப் புரிந்து கொண்ட திரைப்படங்கள் மாத்திரம் தான் பேசு பொருளுக்கு உள்ளாகின்றன. அவ்வகையில் The Sing of Leo புதிய அலை படைப்பாகும்.  


Add new comment

Or log in with...