வில்பத்து தேசிய பூங்காவுக்கு 1000 வேப்பம் கன்றுகள் அன்பளிப்பு | தினகரன்


வில்பத்து தேசிய பூங்காவுக்கு 1000 வேப்பம் கன்றுகள் அன்பளிப்பு

 சுவதேஷி நிறுவனம் நடவடிக்கை 

மூலிகை சவர்க்கார நாமமான கொஹோம்ப தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் சுவதேஷி நிறுவனம், 1000வேப்ப மரக் கன்றுகளை பனாகொட இராணுவ முகாமுக்கு அன்பளிப்பு செய்திருந்தது. வில்பத்து தேசிய பூங்காவில் பயிரிடப்படுவதற்காக இந்த தாவரக் கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன. “சுவதேஷி கொஹோம்ப சத்காரய” எனும் செயற்திட்டத்தின் அங்கமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நடவடிக்கை தொடர்பாக சுவதேஷி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,“வில்பத்து தேசிய சொத்தாகும், இதனை பாதுகாக்கும் வகையில், இந்த திட்டத்தை நாம் முன்னெடுத்திருந்தோம்.” என்றார். நாட்டின் வட மேல் உலர் வலய பிராந்தியத்தில் அமைந்துள்ள வில்பத்து பூங்கா, இலங்கையில் காணப்படும் மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்றாக அமைந்துள்ளது. உலகின் சிறந்த பூங்காக்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சிறுத்தைகளுக்கு புகழ்பெற்றதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் புகழ்பெற்றுள்ளது. அண்மைக் காலங்களில் இந்த பூங்கா பெருமளவு சர்ச்சைகளுக்கு முகங் கொடுத்திருந்தது. இந்த வனாந்தரத்தை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பரவலாக பேசப்பட்டது.   பனாகொட இராணுவ முகாமின் விவசாய பிரிவின் பொறுப்பதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்,“சுவதேஷி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம். வில்பத்து வனாந்தரத்தை பாதுகாப்பதற்கு இது போன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமானவையாகும். எதிர்காலத் தலைமுறையினருக்கும் இந்த வனாந்தரத்தின் சிறப்பை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். எமது வனாந்தரங்களை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பு என்பதுடன், எதிர்காலத் தலைமுறைக்கும், வனஜீவராசிகளின் சஞ்சாரத்துக்கும் அதை பேண வேண்டியது மிக முக்கியமானதாகும்.” என்றார்.  சுவதேஷி கொஹோம்ப சத்காரய செயலணியினர் வேப்ப மரம் என்பது சிறந்த தெரிவாக அமைந்திருக்கும் என பரிந்துரைத்திருந்தனர். பண்டைய காலம் முதல் இந்த வகை தாவரம் இயற்கையின் அற்புதமான மூலப்பொருட்களை கொண்டுள்ளதுடன், மூலிகை சிறப்பையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. வளியை தூய்மைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. நிறுவனத்தின் பிரதான தயாரிப்பாக கொஹோம்ப ஒரிஜினல் ஹேர்பல் சவர்க்காரத்தில் வேப்பம் எண்ணெய் பிரதான மூலப்பொருளாக சேர்க்கப்படுகின்றது. சுவதேஷியினால் தயாரிக்கப்படும் சகல தயாரிப்புகளும் 100% சைவமானவையாகவும், விலங்குகளில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் அமைந்துள்ளன. நிறுவனத்தின் தூர நோக்குடைய சிந்தனை செயற்பாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக அமைந்துள்ளது. சுகாதாரம் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பில் தனது தயாரிப்புகளில் நிறுவனம் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளது. எதிர்காலத்திலும் நாம் இந்த நடவடிக்கைகள் பற்றி கவனம் செலுத்துவோம் என நிறுவனத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.   

 


Add new comment

Or log in with...