தூக்கு தண்டனைக்கு ஒக்டோபர் 30 வரை இடைக்கால தடை | தினகரன்


தூக்கு தண்டனைக்கு ஒக்டோபர் 30 வரை இடைக்கால தடை

மரண தண்டனையை நிறைவேற்றுவதை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, ஜனக் டி சில்வா, அச்சலா வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய 05 நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி உத்தரவிட்டாலும், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாது என உச்ச நீதிமன்றத்தில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்கள், தினம், நேரம் மற்றும் இடம் தொடர்பில் ஜனாதிபதி இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கவில்லை என, ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...