Friday, April 19, 2024
Home » TIN இலக்கத்தை பெற வௌிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு சலுகைகள்

TIN இலக்கத்தை பெற வௌிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு சலுகைகள்

இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

by mahesh
January 17, 2024 6:40 am 0 comment

வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார்.

எனினும், டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெளிநாட்டில் உள்ள ஒருவர், இலங்கையிலிருந்து வருமானம் ஈட்டினால் (வட்டி

வருமானம், வாடகை வருமானம் அல்லது வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை மூலம் வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள்) கண்டிப்பாக TIN எண்ணை பெற வேண்டும். டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வாகனப் பதிவு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மோட்டார் வாகனத் திணைக்களத்துடன் கணினிகளை இணைக்கவுள்ளன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கை சுங்கத்துடன் கணனி வலையமைப்பில் செயற்படுவதால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான சகல தகவல்களையும் திணைக்களம் பெற்றுக் கொள்கிறது.மேலும்,சகல நிறுவனங்களுடனும் வலையமைப்பதன் மூலம் தலைமறைவாக இருக்கும் வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT