எம்.பியின் மகனுக்கு ஜூலை 04 வரை விளக்கமறியல் | தினகரன்

எம்.பியின் மகனுக்கு ஜூலை 04 வரை விளக்கமறியல்

எம்.பியின் மகனுக்கு ஜூலை 04 வரை விளக்கமறியல்-Chilaw UNP MP Son Arrested

அமைச்சு பாதுகாப்பு பிரிவிற்குரிய, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் புரிந்த சம்பவம் தொடர்பில் கைதான, இஷான் சத்துரங்க அபேசேகர என்பவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது..

ஐ.தே.க. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான, ஷாந்த சிசிர குமார அபேசேகரவின் மகனுக்கே இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (29) இரவு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது 26 வயமதன பாராளுமன்ற உறுப்பினரின் மூத்த புதல்வர், தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (01) சிலாபம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (04) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...