கொள்ளையிட்டு தப்பிய இருவர் ரூ. 29 இலட்சத்துடன் கைது | தினகரன்


கொள்ளையிட்டு தப்பிய இருவர் ரூ. 29 இலட்சத்துடன் கைது

கொள்ளையிட்டு தப்பிய இருவர் ரூ. 29 இலட்சத்துடன் கைது-Akuressa Robbery-2 Arrested

இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸை நகரிற்கு அண்மையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில், வங்கியில் வைப்பிடுவதற்காக வைத்திருந்த ரூபா 29 இலட்சம் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த இருவரும் பணத்தை கொள்ளையிட்டு சென்ற வேளையில் அக்குரஸ்ஸ பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸ் குழுவினர் சந்தேகநபர்களை அவர்கள் கொள்ளையிட்ட பணத்துடன் கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 32, 35 வயதுடைய, ஹக்மண மற்றும் திக்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


Add new comment

Or log in with...