கான்ஸ்டபிளை தாக்கிய சிலாபம் எம்.பியின் மகன் கைது | தினகரன்


கான்ஸ்டபிளை தாக்கிய சிலாபம் எம்.பியின் மகன் கைது

கான்ஸ்டபிளை தாக்கிய சிலாபம் எம்.பியின் மகன் கைது-Chilaw UNP MP Son Arrested

அமைச்சு பாதுகாப்பு பிரிவிற்குரிய, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் புரிந்த சம்பவம் தொடர்பில், இஷான் சத்துரங்க அபேசேகர என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான, ஷாந்த சிசிர குமார அபேசேகரவின் 26 வயதான மூத்த புதல்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (01) சிலாபம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (29) இரவு சிலாபம் - குருணாகல் வீதியின் சேதவத்தை பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பாராளுமன்ற உறுப்பினரின் மூத்த புதல்வர், பொல் ஒன்றினால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (01) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...