Saturday, April 20, 2024
Home » எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா

- விவசாயப் பொருட்களில் கூட வரி; சஜித் பிரேமதாஸ விசனம்

by Rizwan Segu Mohideen
January 15, 2024 1:27 pm 0 comment

தைப்பொங்கல் பண்டிகையையிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) தைப்பொங்கல் விழாவில் இடம்பெற்றது.

தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இவ்வேளையில், விவசாயப் பொருட்களுக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரிசி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக இதில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில்,ஒரு நாடாக நாம் தொடர்ந்து இவ்வாறே பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.இந்த நன் நோக்கத்திற்காக எழுந்து நிற்க தைரியம் கிட்டப் பிரார்த்திப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டில் நாலா பகுதிகளிலும் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் பக்தர்கள் என அனைத்து இன மக்களும் நாட்டில் நிலவும் வங்குரோத்து நிலை காரணமாக மிகவும் உதவியற்ற நிலைக்கு ஆக்கியுள்ளனர்.விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவு வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த எமது நாடு,தற்போதுள்ள அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தன்னிச்சையான ஆட்சியினாலயே இவ்வாறு கடுமையான வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாம் அனைவரும் அனைத்து மதங்களையும்,இனங்களையும்,சாதிகளையும் சமமாக மதிக்க வேண்டும்.அதுவே நமது நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு காரணமாக அமையும்.எந்தவொரு பாகுபாடுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் அவருக்குரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப புரட்சியை நோக்கிச் சென்று, குறைந்த இட வசதியில் கூடிய அறுவடை பெறக்கூடிய முறைகளை பின்பற்றி இயற்கையை மதிக்கும் வாழ்க்கை முறையை நாம் பின்பற்றியொழுக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வங்குரோத்து நிலையால் நிர்க்கதிகளை சந்தித்து வரும் இந்நாட்டு மக்களை மேலும் சிரமங்களுக்குள் தள்ளுவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கையே காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் சிறந்த நாள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT