Thursday, March 28, 2024
Home » போதைப்பொருள் ஒழிப்பு: மேலும் 958 சுற்றிவளைப்புகளில் 952 பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு: மேலும் 958 சுற்றிவளைப்புகளில் 952 பேர் கைது

- 2 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிக கஞ்சா செடிகள் மீட்பு

by Rizwan Segu Mohideen
January 15, 2024 12:34 pm 0 comment

– தேடப்படும் பட்டியலில் உள்ள 42,248 பேரில் 1,468 பேர் கைது
– 4,310 போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல போதைப் பொருட்கள் மீட்பு

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் பொலிஸாரால் ‘யுக்திய’ விசேட சோதனை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றையதினம் (14) 952 சுற்றிவளைப்புகளில் 927 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் உள்ளிட்ட 952 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 11 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான 10 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகணத்தில் 505 சுற்றிவளைப்புகளில் 462 ஆண்களும் 14 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 92 சுற்றிவளைப்புகளில் 87 ஆண்களும் 03 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், தேடப்பட்டு வரும் பட்டியலில் உள்ள 42,248 பேரில் 1,468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 42,248 பேரின் பெயர்ப் பட்டியல் அண்மையில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமைக்கமைய, குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேடப்படும் 42,248 சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸ் மாஅதிபர் பணிப்பு

நேற்றையதினம் (14) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட போதைப்போருட்கள் விபரம்

  • ஹெரோயின் – 276.824 கிராம்
  • ஐஸ் – 2,980.51 கிராம்
  • கஞ்சா – 2.817 கி.கி.
  • கஞ்சா செடிகள் – 235,212
  • போதை மாத்திரைகள் – 4,310
  • ஏனைய போதைப்பொருட்கள் – 337.318 கிராம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT