Friday, April 26, 2024
Home » கந்தளாய் வான் கதவு திறப்பு; விவசாயிகள் பாதிப்பு

கந்தளாய் வான் கதவு திறப்பு; விவசாயிகள் பாதிப்பு

by Prashahini
January 15, 2024 1:16 pm 0 comment

திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாகவும் கந்தளாய் குளத்தின் 10 வான் கதவு திறக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட, வன்னியனார்மடு, புளியடிக்குடா முதலான பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

இப்பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பெரும் போக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ளன. இவ்வாறு செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே கந்தளாய் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்கை பண்ணப்பட்ட வயல் இம்முறையும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. கதிர் புடலை நெல் வருகின்ற காலப்பகுதியில் நீர் அதனுள் புகுந்தால் எவ்வித பயனும் இல்லை. கடன் பட்டுத்தான் வேளாண்மை செய்தோம் எங்களுக்கு இதற்குரிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

படிச்சல் வாய்க்கால் இல்லாததனால் இந்த நிலைமை ஏற்பட்டு வருகின்றது. வெள்ள நீரினால் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கதிர் குடலை பருவம் நெல் வருகின்ற நேரத்தில் இவ்வாறு மழை பெய்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.

ண்ணை ,பசளை, விலை அதிகம். இவ்வாறு செலவு செய்தது தான் இந்த வேளாண்மையை செய்தோம். பசளை வாங்குவதற்கான காசு இன்னும் தரவில்லை எனவும் விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT