ஞானசார தேரர் அடிப்படை உரிமை மனுவை மீளப் பெற்றார் | தினகரன்


ஞானசார தேரர் அடிப்படை உரிமை மனுவை மீளப் பெற்றார்

 
பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை மீளப்பெற்றுள்ளார்.
 
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அவர் சார்பில் கடந்த 13 ஆம் திகதி ஞானசார தேரர் அவரது சட்டத்தரணியின் மூலம் குறித்த மனு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார் 
 
இன்றையதினம் (22) மூவர் அடங்கிய நீதிபதிகளால் குறித்த மனு விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது அவரது சட்டத்தரணி அம்மனுவை மீளப்பெறுவதற்கு அனுமதி கோரியதை அடுத்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
 
வழக்கு விசாரணைகள் தொடர்பில் ஆஜராகாத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஞானசார தேரர், நேற்றையதினம் (21) நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, பின்னர் மற்றுமொரு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஞானசார தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடர்பில் அவரை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...