Saturday, April 20, 2024
Home » தேர்ச்சி மிக்கவர்களாக செயற்பட தைத்திருநாளில் உறுதி பூணுவோம்

தேர்ச்சி மிக்கவர்களாக செயற்பட தைத்திருநாளில் உறுதி பூணுவோம்

- கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்

by damith
January 15, 2024 10:45 am 0 comment

தமிழர் பாரம்பரியம் மிகத்தொன்மையானது என்பது உணரப்பட்டிருப்பதால் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் இந்நன்றி நாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.  இலங்கையராக எம்மைப் பொறுத்தவரையில் இத் தைப்பிறப்பு எல்லா வளங்களும்நலன்களும் நிறைந்ததாக அமைய வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாகும் என்று இராஜாங்க அமைச்சர்அருணாச்சலம் அரவிந்தகுமார் தைத்திருநா ள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அடுத்துவரும் சமூக அரசியல் பொருளாதார நகர்வுகளின்போது சிந்தனை மிக்கவர்களாகவும் தேர்ச்சி மிக்கவர்களாகவும் செயலாற்றுவதற்கு முற்படுவோம். தமிழர் பாரம்பரியத்தில் நன்றி பகர்தல்என்பது அன்பையும் மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியையும் வெளிப்படுத்தி நிற்கிறது. அந்தவகையில் உலகுக்கு ஒளி கொடுத்து உணவுக்கு ஆசி வழங்கும் சூரியபகவானுக்கு ஒட்டு மொத்தமாய் நன்றி பகரும் நாளாக தைத்திருநாள் அமைந்திருக்கிறது.

நன்றி பகர்தல் என்ற பதத்துக்கு தமிழர் வரலாறுகள் பறைசாற்றியுள்ளன. நன்றி மறப்பது நன்றன்று என்பதற்கமைய தமிழர்கள் இதனைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

மலையக சமூகத்தாரின் 200 வருட கால இலங்கை வரலாற்றில் தைத்திருநாள் இரண்டறக் கலந்திருக்கிறது என்று கூறமுடியும். அந்தவகையில் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் இந்நந்நாள் இன்பம் நிறைந்ததாக மகிழ்ச்சி பொங்கியதாக அமைகிறது. இது நாம் இடும் பொங்கலில் பிரதிபலிக்கிறது.

தமிழர் பாரம்பரியம் மிகத்தொன்மையானது என்பது உணரப்பட்டிருப்பதால் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் இந்நன்றி நாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இலங்கையராக எம்மைப் பொறுத்த வரையில் இத்ததைப்பிறப்பு எல்லா வளங்களும் நலன்களும் நிறைந்ததாக அமையவேண்டும் என்பது எனது பிரார்த்தனையாகும்.

ஆகவே, அடுத்துவரும் சமூக அரசியல் பொருளாதார நகர்வுகளின்போது சிந்தனைமிக்கவர்களாகவும் தேர்ச்சிமிக்கவர்களாகவும் செயலாற்றுவதற்கு முற்படுவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT