இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது | தினகரன்

இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது-12 Indian Fisherman Arrested

 

அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரு படகுகளும் பறிமுதல்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது  இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (05) அதிகாலை இந்தியாவின், இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த கடற்படைப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படையினர் தடுத்து வைத்திருப்பதுடன், கைதுசெய்யப்பட்ட 12  மீனவர்களையும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

இவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...