MercedesTrophy நிகழ்வில் புதிய வர்த்தக நாம அடையாளத்தை DIMO அறிமுகம் | தினகரன்

MercedesTrophy நிகழ்வில் புதிய வர்த்தக நாம அடையாளத்தை DIMO அறிமுகம்

MercedesTrophy இலங்கையில் இறுதிப்போட்டி நிகழ்வு

இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான அங்கீகார அனுமதி பெற்ற ஒரேயொரு பொது விநியோகத்தரான DIMO 27 ஆவது தடவையாக இடம்பெறுகின்ற MercedesTrophy சுற்றுப்போட்டியின் போது புதிய வர்த்தகநாம அடையாளத்தை அறிமுகப்படுத்தவுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெறுகின்ற மிகவும் ஆடம்பரமான கோல்ஃப் போட்டி நிகழ்வாக அமைந்துள்ள MercedesTrophy இலங்கை தேசிய மட்ட இறுதிப்போட்டி 2019 நிகழ்வை ஆரம்பிக்கின்றமை தொடர்பில் DIMO அறிவித்துள்ளது. இந்நிகழ்வானது போட்டியில் பங்குபற்றுகின்றவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு உந்துசக்தி அளிப்பதுடன், DIMO நிறுவனத்தின் புதிய வர்த்தகநாமத்தின் இலக்கினையும் மீள உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான MercedesTrophy இலங்கை தேசிய இறுதிச் சுற்றுப்போட்டியானது 2019 ஜுலை 6 ஆம் திகதியன்று Royal Colombo Golf Club திடலில் இடம்பெறவுள்ளது. Mercedes-Benz உரிமையாளர்கள் அனைவருக்கும் இதில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய வெற்றியாளராக முடிசூடிக்கொள்ளும் போட்டியில் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் போட்டியாளரகள் கலந்துகொண்டு நேருக்கு நேர் மோதவுள்ளதை கோல்ஃப் ஆர்வலர்கள் கண்டுகளிக்க முடியும்.

 பின்வரும் நான்கு பிரதான பிரிவுகளின் கீழ் கோல்ஃப் போட்டியாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்: Handicap Group A (0-12), Handicap Group B (13-20), Handicap Group C (21-24) மற்றும் Handicap Group D (00-36)-மகளிர் பிரிவு. இதில் வெற்றி பெறுகின்றவர்களுக்கு இந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவிலுள்ள Sanctuary Cove Golf & Country Club திடலில் இடம்பெறவுள்ள MercedesTrophy ஆசிய இறுதிப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரின் தேவைகள் தொடர்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்வாங்கிக்கொள்வதில் தான் காண்பித்து வருகின்ற தீவிரமான ஈடுபாட்டிற்கு அமைவாக, சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பொறுத்தவரையில்,தோற்ற மற்றும் இடைச்செயற்பாட்டு அடிப்படையில் நவீனமயமாக்கப்பட்ட மற்றும் தீர்க்கதரிசனம் மிக்க DIMO வர்த்தகநாம அனுபவத்தைக் கட்டியெழுப்பும் அறுதியான இலக்குடன், தனிச்சிறப்பு வாய்ந்த வர்த்தகக் கலாச்சாரமொன்றைக் கட்டியெழுப்பி, வலுவான உத்வேகம் மற்றும் முற்போக்கான சிந்தனை கொண்ட கோட்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் தனது புதிய வர்த்தகநாம அடையாளத்தை DIMO அறிமுகப்படுத்தியுள்ளது.

DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இத்தருணத்தில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கையில்,அடுத்த தசாப்தத்திற்கும் அதற்கும் அப்பாலும் நாம் முன்செல்வதற்கு எம்மைத் தயார்படுத்திக் கொண்டுள்ளமையின் பிரதிபலிப்பாக எமது புதிய அடையாளம் அமைந்துள்ளது.

ஏனையவர்களை ஊக்குவித்து, நாம் வாழ்கின்ற உலகின் வளர்ச்சி மாற்றத்திற்கு வித்திடுகின்ற சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை நாம் எப்போதும் எதிர்நோக்கியுள்ளதுடன்,சர்வதேச தரம் கொண்ட மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமானம் மிக்கதாக உள்ள உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எமது கவனத்தை நாம் எப்போதும் பேணி வந்துள்ளோம்.

சமகால உலகின் தேவைகளைத் தழுவிக் கொள்வதற்கு பெயர்பெற்று விளங்குகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில், புதியதொரு தசாப்தத்தில் நாம் காலடியெடுத்து வைக்கின்ற இத்தருணத்தில் எமது அணிக்கு புதுப்பிக்கப்பட்ட வீரியத்தைக் கொண்டு வருவதற்கு புதிய வர்த்தகநாம அடையாளம் உதவுமென நாம் உறுதியாக நம்புகின்றோம்,' என்று குறிப்பிட்டார்.

பெறுமதிமிக்க Mercedes-Benz ணெவாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக MercedesTrophy ஆசிய இறுதிப்போட்டியிலும், அதன் பின்னர் உலகளாவிய இறுதிப்போட்டியிலும் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...