RENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO | தினகரன்

RENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO

RENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO-OPPO to launch a brand-spanking new series - RENO with 10x ZOOM

புதிய அலங்காரம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றினூடாக இனிய அனுபவம்

ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் கடுமையான போட்டி நிலவும் நிலையில், OPPO, தனது புத்தாக்கமான அறிமுகங்களில் மற்றுமொரு உள்ளடக்கமாக, புதிய RENO தொலைபேசி தெரிவுகளை அறிமுகம் செய்யவுள்ளது.

OPPO தனது பிரபலமான R Series தொலைபேசிகளின் பதிப்பை இடைநிறுத்தியதை தொடர்ந்து RENO உடனான புதிய பதிப்பை வெளியிடவுள்ளது.

RENO 10x ZOOM தொடர்பில் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பு காணப்படும் நிலையில், RENO வர்த்தக நாமம் தனது கவனத்தை மேலும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புத்தாக்கமான உள்ளடக்கம் மற்றும் கண்கவர் அலங்காரத்தையும் உள்ளடக்கி சொகுசான அனுபவத்தை வழங்க முன்வந்துள்ளது.

OPPO இன் பாரம்பரிய அடையாளமான கண்கவர் வடிவமைப்பில் கவனம் செலுத்தி, தமது உயர் ரக கமெரா தொழில்நுட்பத்தில் கவனத்தை திருப்ப RENO ஊடாக முன்வந்துள்ளது. இந்த சாதனத்தில் shark-fin pop-up கமெரா, Snapdragon 855 processor மற்றும் மூன்று கமெரா கட்டமைப்பு மற்றும் 10x hybrid zoom லென்ஸ் போன்றன அடங்கியுள்ளன.

OPPO RENO, 10x hybrid zoom இல், 6.65-அங்குல full-HD + AMOLED திரை காணப்படுவதுடன், octa-core Qualcomm Snapdragon 855 processor இனால் வலுவூட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனில் 48MP Sony IMX586 உணரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், f/1.7 aperture ஐ கொண்டுள்ளது. இவை selfieகளை மிகவும் தெளிவாக எடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளன. OPPO இன் உயர்தர கையடக்க தொலைபேசியான இதில் 13MP secondary கமெரி அடங்கியுள்ளதுடன், 8MP super wide angle கமெராவும் காணப்படுகின்றது.

விரைவில் OPPO தனது 5G தயார் நிலையான OPPO RENO தெரிவுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

பல வாடிக்கையாளர்கள் நவீன அலங்காரங்களுக்கு மேலாக புதிய புத்தாக்கங்களை நாடும் நிலையில், OPPO இனால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடு மூலோபாயத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. RENO தெரிவுகள் வடிவமைப்பு, தரம் மற்றும் கமெரா உள்ளடக்கம் போன்றவற்றில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...