ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்ஷாவில் சோதனை | தினகரன்

ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்ஷாவில் சோதனை

ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் காஷல், சொய்சாவில் சோதனை-Complaints Against Shafi Shihabdeen Inquiry at Castle and Soysa Hospitals

வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை, கொழும்பு காஷல் மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சொய்ஷா மகப்பேற்று வைத்தியசாலைகளில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, இது தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய சோதனைகள் தொடர்பிலான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, குருணாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முறைப்பாட்டை மேற்கொண்டவர்களில் ஒரு சில பெண்களே குறித்த சோதனைக்கு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...