4,017 சங்குகளுடன் ஒருவர் கைது | தினகரன்

4,017 சங்குகளுடன் ஒருவர் கைது

தலைமன்னாரில் சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சங்குகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில், ஒருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு, அச்சங்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (18) தலைமன்னாரிலிருந்து பேசாலை நோக்கி சென்ற கப் ரக வாகனமொன்றை, கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் 1,645  சங்குகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபரிடம் மேலும் விசாரணை செய்தபோது, அவரது வீட்டிலிருந்து 2,372 சங்குகள் இருந்தமை தெரியவந்தது.

இந்நிலையில், பேசாலையை சேர்ந்த 51 வயதுடைய குறித்த சந்தேகநபர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.  

 


Add new comment

Or log in with...