கோத்தாபய உள்ளிட்ட 7 பேருக்கு விசேட நீதிமன்றில் வழக்கு | தினகரன்

கோத்தாபய உள்ளிட்ட 7 பேருக்கு விசேட நீதிமன்றில் வழக்கு

கோத்தாபய உள்ளிட்ட 7 பேருக்கு விசேட நீதிமன்றில் வழக்கு-Case Filed Against Gotabaya Rajapaksa at Special High Court

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்‌ஷவின் தந்தையான, டீ.ஏ. ராஜபக்‌ஷவின் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதில், அரச நிதி முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில், விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...