Home » சென்னையில் தரையிறங்குவதற்கு வழியின்றி தவித்த விமானங்கள்!

சென்னையில் தரையிறங்குவதற்கு வழியின்றி தவித்த விமானங்கள்!

by damith
January 15, 2024 7:55 am 0 comment
போகி பண்டிகையினால் எங்கும் புகைமூட்டம்!

சென்னையில் நேற்று விமான சேவை கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக விமானசேவை கடுமையான பாதிப்பு அடைந்தது.

போகி என்பது நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாகும். மற்​றைய மாநிலங்களில் மகர சங்கராந்திக்கு முந்திய நாள் என்று இது அழைக்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பரவலாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகி நாளில், மக்கள் பழைய விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய விஷயங்களில் கவனம் செலுத்தி மாற்றம் அல்லது மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள். விடியற்காலையில், மக்கள் வீட்டில் மரக்கட்டைகள், மற்ற திட எரிபொருள்கள் மற்றும் பயனற்ற மரச்சாமான்களைக் கொண்டு நெருப்பை கொளுத்துவார்கள். இதன் மூலம் ஆண்டுக் கணக்குகள் முடிவடைந்து, மறுநாள் அறுவடையின் முதல் நாளில் புதிய கணக்குகள் தொடங்கும். அதாவது தமிழ்ப் புத்தாண்டும் இதற்கு மறுநாள்தான் தொடங்கும்.

பழையன கழிதலும், புதியன புகுதலுமே பொங்கல் பண்டிகையின் நோக்கம் ஆகும். போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க நேற்று பழைய பொருட்ளை எரித்து போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடினர். இதனால் சென்னையில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. பல பகுதிகளில் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடிய பொதுமக்களால் வீதிகள் தெரியாத அளவிற்கு புகை ஏற்பட்டது. சென்னையில் விமான சேவையும் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. ஓடுதளம் தெரியாத அளவிற்கு வீதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டது. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் அவதியுற்றதைக் காண முடிந்தது. ஹைதராபாத் விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது. பலரின் பொங்கல் பயணம் போகி காரணமாக பாதிக்கப்பட்டது. இவர்கள் சென்னைக்கு திரும்புவது சிக்கலாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT