சங்கடப்படுத்தும் வாய்வுக்கோளாறு... | தினகரன்


சங்கடப்படுத்தும் வாய்வுக்கோளாறு...

சங்கடப்படுத்தும் வாய்வுக்கோளாறு...-Flatulence, Gastritis, Digestion, Health

காரணங்கள், தீர்வுகள்!

பெரும்பாலானவர்களை படுத்தியெடுக்கிறது இந்த வாய்வுக்கோளாறு. இது ஏன் ஏற்படுகிறது, அவற்றை சரி செய்வது எப்படி என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

பெருங்குடல் சார்ந்த நோய்கள், செரிமான தசைகளில் பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், வயிற்றுப்புண் காரணமாக அவ்வப்போது வாய்வு வெளியேறி சங்கடப்படுத்தலாம்.

குடலில் சேரும் வாயுக்களில்கரியமில வாயு, ஹைட்ரஜன், மீத்தேன், ஒக்சிஜன் போன்றவை அடங்கியிருக்கின்றன. கந்தகம் சேர்ந்த கூட்டுப்பொருள்கள் சேர்ந்தால், வெளியேறும் வாய்வில் நாற்றம் அதிகரிக்கும்.

அடிக்கடி வாய்வு வெளியேறுவதைத் தடுக்க அவ்வப்போது புதினா துவையல் செய்து சாப்பிடலாம். அதேபோல் அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் நல்லது. நலம் பயக்கும் பக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம்.

மலக்கடை நீக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடுவதும் வாய்வுக் கோளாற்றை சரிசெய்யும்.

டயட் என்ற பெயரில் மாற்றி மாற்றி உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, உணவில் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்றுவது வாய்வுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.

குடலில் தேங்கியிருக்கும் செரிமானமாகாத உணவுகளில் பக்டீரியாக்கல் உண்டாகி நொதிக்கச் செய்யும். அதனால் ஏற்படுவதுதான் வாய்வு.

மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதும் வெளியேற்றிவிட வேண்டும். இல்லையென்றால் குடலில் தங்கி, நாற்றத்துடன் கூடிய வாய்வு வெளியேறும்.

நாம் உண்ணும் உணவுப் பொருள்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாத சூழலிலும் குடல் பகுதியில் வாய்வு உண்டாகலாம். குடல் பகுதியில் நல்ல பக்டீரியாக்கல் அழிவதாலும் வாய்வு ஏற்படலாம்.

மருத்துவரின் பரிந்துரையின்றி உட்கொள்ளும் சில மாத்திரைகளாலும் குடல் பகுதியில் உள்ள நன்மை செய்யும் பக்டீரியாக்கல் அழிந்து வாய்வு உண்டாகலாம்.

சிறு குடல் பகதியில் அளவுக்கு அதிகமாகப் பக்டீரியாக்கள் கூடும்போதும் (Small Intestinal Bacterial Overgrowth) வாய்வு உண்டாகும்.


Add new comment

Or log in with...