'பேஸ்புக் பார்ட்டி': பெலிஹுல்ஓய ஹோட்டலில் 4 யுவதிகள் உள்ளிட்ட 51 பேர் கைது | தினகரன்

'பேஸ்புக் பார்ட்டி': பெலிஹுல்ஓய ஹோட்டலில் 4 யுவதிகள் உள்ளிட்ட 51 பேர் கைது

'பேஸ்புக் பார்ட்டி': பெலிஹுல்ஓய ஹோட்டலில்  4 யுவதிகள் உள்ளிட்ட 51 பேர் கைது-FB Party-51 Including 4 Women Arrested at Belihuloya Hotel

பலாங்கொடை, பெலிஹுல்ஓய உல்லாச ஹோட்டலில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 51 பேர் போதைப்பெருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (17) இரத்தினபுரி மதுவரி திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவத்தை விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'பேஸ்புக் பார்ட்டி': பெலிஹுல்ஓய ஹோட்டலில்  4 யுவதிகள் உள்ளிட்ட 51 பேர் கைது-FB Party-51 Including 4 Women Arrested at Belihuloya Hotel

பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 4 பெண்கள் உள்ளிட்ட 51 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை, இரத்தினபுரி, காலி, அநுராதபுரம், கம்பஹா, எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 வயதிலும் குறைவான இளவயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

'பேஸ்புக் பார்ட்டி': பெலிஹுல்ஓய ஹோட்டலில்  4 யுவதிகள் உள்ளிட்ட 51 பேர் கைது-FB Party-51 Including 4 Women Arrested at Belihuloya Hotel

இவர்களிடமிருந்து பாவனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த 300 மில்லிகிராம் கொக்கைன், 160 மில்லிகிராம் ஹெரோயின், 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் இரத்தினபுரி போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அ திகாரிகள் தெரிவித்தனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)

Add new comment

Or log in with...