கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக பரீட்சை 20 முதல் 23 வரை | தினகரன்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக பரீட்சை 20 முதல் 23 வரை

கிழக்கு மாகாண தொண்டர்  ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை  திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள கிழக்கு மாகாண பேரவை செயலக கட்டிடத்தில்   நடைபெறவுள்ளதாக,  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  ஐ.கே.ஜீ. முத்துபண்டா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3 ஆம் வகுப்பின் II  ஆம் தரத்திற்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும்,  இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.  அத்தோடு, நேர்முகப் பரீட்சை தொடர்பான கடிதங்கள் சம்பந்தப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்   தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை http://www.ep.gov.lk/en/minieducationindex  எனும் இணையதளத்தினூடாக பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நேர்முகப் பரீட்சை கடந்த ஏப்ரல் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்தபோதிலும், நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்நேர்முகப் பரீட்சை இம்மாதம் 4 ஆம் 5 ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ஹஸ்பர் ஏ.ஹலீம், அப்துல் பரீட் -திருமலை மாவட்ட விசேட நிருபர்)

 

 

 

 


Add new comment

Or log in with...