'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு | தினகரன்


'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு

கலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை எடுத்தியம்பும் 'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீட்டு விழா இன்று ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. 

அக்கரைப்பற்று கல்வி வலய தமிழ்த்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனீபா இஸ்மாயில் தலைமையில் பி.ப.3.15மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சி.பைஷல் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.   

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...