அஜீத்தின் 'நேர் கொண்ட பார்வை' | தினகரன்


அஜீத்தின் 'நேர் கொண்ட பார்வை'

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் நல்ல வரவேற்பும், வசூல்  வேட்டையும் பெற்ற நிலையில் நேர்கொண்ட பார்வை படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடையேயும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளதையடுத்துஅஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேர்கொண்ட பார்வை ட்ரெண்டாகி வருகிறது.

படம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச்.வினோத் நேர்கொண்ட பார்வையை இயக்குகிறார். அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தாரங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Add new comment

Or log in with...