ஓகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் ‘காப்பான்’ | தினகரன்

ஓகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் ‘காப்பான்’

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக யூடியூபில் வெளியிடப்பட்டது. சூர்யா, மோகன்லால், ஆர்யா என மல்டிஸ்டார் படமாக இருக்கும் இந்தப் படத்தின் டீசருக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.பல கெட்டப்புகளில் சூர்யா டீசரில் அசத்துகிறார்.

ஆக்ஷன் காட்சிகளும், அரசியல் கதையுமாக இருக்கும் இந்தப் படம் கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணியின் பெரிய வெற்றிப்படமான 'அயன்' படத்திற்குப் பிறகு நல்லதொரு கமர்ஷியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.


Add new comment

Or log in with...