மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது | தினகரன்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

பொகவந்தலாவை டின்சின் விவசாய  பண்ணைக்கு பின்னால் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில்  மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 04 சந்தேக நபர்களை இன்று (14) காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு, மாணிக்கக்கல்அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பொகவந்தலாவை  பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின்போதே, இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இச்சந்தேகநபர்களுக்கு  பொலிஸாரினால் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 18 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும்படி பொகவந்தலாவ பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  -எம்.கிருஸ்ணா)

 


Add new comment

Or log in with...