Friday, March 29, 2024
Home » வைத்தியசாலை பணிகளில் இராணுவம் களமிறக்கம்

வைத்தியசாலை பணிகளில் இராணுவம் களமிறக்கம்

by sachintha
January 12, 2024 8:06 am 0 comment

சுகாதார அமைச்சு கோரியதால் நடவடிக்கை:

போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், இராணுவத்தினர் களமிறங்கி வைத்தியசாலை செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இப்பணிகளில் ஈடுபட இராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர்.இந்நிலையில், வைத்தியசாலைகளின் தேவைகளுக்கேற்ப படையினரை அனுப்புவதற்கு தயாராகுமாறு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக இராணுவத்தினர் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதன்படி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டிய, மகாமோதர, பேராதனை, குருநாகல் போதனா வைத்தியசாலைகள், மாத்தறை பலாங்கொடை, எஹெலியகொடை, நாவலப்பிட்டிய, பதுளை, கம்பளை, மீரிகம ஆகிய வைத்தியசாலைகளின் வழமையான நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதற்கு இராணுவத்தினர் பணியமர்தப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த வைத்தியசாலைகளின் தேவைக்கேற்ப, இராணுவத்தின் சுமார் 500 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அவசர தேவை ஏற்படும் பட்சத்தில், படைகளை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களின் வழமையான நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள தேவையான சகல படிமுறைகளை எடுக்குமாறும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT