கிண்ணியாவை சேர்ந்த 4 மீனவர்கள் கைது | தினகரன்

கிண்ணியாவை சேர்ந்த 4 மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிண்ணியாவை சேர்ந்த 4 மீனவர்களை கடற்படையினர்  கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 4 மீனவர்களையும் நேற்று (11) கைதுசெய்துள்ள கடற்படையினர்,  அவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்களையும்  கைப்பற்றியுள்ளனர்.  

இவ்வாறு கைதானவர்கள் 27 வயது முதல் 56 வயது வரையானவர்கள் என்பதோடு, அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு, ஒரு இஞ்சின், சட்டவிரோத மீன்பிடி வலை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றியுள்ள உபகரணங்களுடன் கைதாகியுள்ள மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

 

 


Add new comment

Or log in with...