20 மில்லி கிராம் தங்கத்தில் தயாரான உலக கிண்ணம் | தினகரன்

20 மில்லி கிராம் தங்கத்தில் தயாரான உலக கிண்ணம்

விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளி ஒருவர், வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் கிரிக்கெட் உலக கிண்ணத்தை போன்று உலக கிண்ணத்தை செய்துள்ளார்.

இங்கிலாந்தில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

 வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலக கிண்ணத்தை போன்று விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளி ரமேஷ், வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் உலக கிண்ணத்தை செய்துள்ளார். இந்திய 60 ரூபாய் செலவில் செய்யப்பட்ட இந்த உலக கிண்ண ஒரு அரிசியின் உயரத்தை விட குறைவாக உள்ளது. இதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டில் 40 மில்லி கிராம் எடையில் உலக கிண்ணத்தை ரமேஷ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...