Home » வேலணை முதல் புங்குடுதீவு வரையான பாலம் புனரமைப்பு

வேலணை முதல் புங்குடுதீவு வரையான பாலம் புனரமைப்பு

by sachintha
January 12, 2024 9:50 am 0 comment

வருட இறுதிக்குள் நடவடிக்கை: ஸ்ரீதரன் MPயின் கேள்விக்கு அமைச்சர் பந்துல பதில்

வடக்கில் வேலணைத் துறையிலிருந்து புங்குடு தீவு வரையான நான்கு கிலோ மீற்றர் நீளமான பாலத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளை, இவ்வருட இறுதிக்குள் முன்னெடுக்க முடியும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடன் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் உடனடியாகவே இப்பாலத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

மேற்படி பாலம் மற்றும் வீதி தொடர்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது. நிதி இல்லாமையே அதனை ஆரம்பிப்பதற்கு உள்ள பிரச்சினையாகும் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நிறைவுறும் வரை, எந்த சர்வதேச நாடுகளிலிருந்தும் அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும், குறிப்பாக இந்த வருட இறுதிக்குள் இத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி எஸ். ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீதரன் எம்.பி தமது கேள்வியின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வேலனணத் துறையிலிருந்து புங்குடு தீவு மடத்துவெளி வரையிலான பாலம் நாட்டில் காணப்படும் மிக நீண்டமான பாலங்களில் ஒன்றாகும். இது, பல தீவுகளை இணைக்கின்ற பாலமாகும். இந்தப் பாலம் கடந்த 65 வருட காலமாக புனரமைப்பு செய்யப்படவில்லை. தற்போது இந்தப் பாலம் மிக ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனூடாக பயணிப்பது மிகவும் அபாயகரமானது. இப்பகுதியில் பல விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் உதவியுடனாவது உடனடியாக இந்த பாலத்தை புனரமைப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ளோர் பலர் இதற்கு உதவுவதற்கு முன் வரும் நிலையில் அதற்கான ஒரு திட்டத்தை தயாரித்து புனரமைப்பு பணிகளை ஆரம்பித்தால் அனைவரதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் உடனடியாகவே இந்த வருட இறுதிக்குள் இந்த பாலத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT