ஹட்டன் இ.போ.சவுக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் | தினகரன்

ஹட்டன் இ.போ.சவுக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில்

நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்த போதிலும், ஹட்டன் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளும் இன்றையதினம் (12) சேவையில் ஈடுபட்டன

இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் பணி புரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு நிலுவைப் பணம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பதவி உயர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம் எட்டப்பட்டது. இருப்பினும், ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான  கொழும்பு -ஹட்டன், கண்டி -ஹட்டன் பொகவந்தலாவை –மஸ்கெலியா, நுவரெலியா  தலாவக்கலை மற்றும் ஏனைய பகுதிகளுக்கான இலங்கை போக்குவரத்து  சேவையின் பேருந்துகள் இன்றையதினம் சேவையில் ஈடுபட்டன.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் )


Add new comment

Or log in with...