மினுவாங்கொடை கலவரம்; 7 பேருக்கு பிணை | தினகரன்


மினுவாங்கொடை கலவரம்; 7 பேருக்கு பிணை

மினுவாங்கொடையில் இடம்பெற்ற இனக்கலவர சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 07 சந்தேகநபர்கள் இன்று (12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மினுவாங்கொடை நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலைப்படுத்தியபோது, தலா 02 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்களிடம் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்பதால், அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க  நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.  

உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர், மினுவாங்கொடை, கொட்டாரமுல்ல, பண்டுவஸ்நுவர,ஹெட்டிபொல, கொட்டம்பபிட்டி மற்றும் பிங்கிரிய,கினியம உள்ளிட்டபிரதேசங்களில் கடந்த மே 13 ஆம் திகதி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதலால் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள்,  வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.


Add new comment

Or log in with...