கதிர்காம தேவாலய உற்சவம்; குமண சரணாலய நுழைவாயில் 27 ஆம் திகதி திறப்பு | தினகரன்

கதிர்காம தேவாலய உற்சவம்; குமண சரணாலய நுழைவாயில் 27 ஆம் திகதி திறப்பு

ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்திற்காக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக குமண தேசிய சரணாலயத்தின் நுழைவாயில் எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 09ஆம் திகதிவரை திறந்து வைக்கப்படவுள்ளதாக சரணாலயத்தின் பொறுப்பாளர் சிசிரகுமார தெரிவித்தார். 

யால தேசிய சரணாலயத்தினூடாக கதிர்காமம் புனித நகரம் வரை வருடாந்தம் பெரும் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருகின்றனர். கடந்தவருடம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் 25,000 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக ஆடிவேல் உற்சவத்திற்கு வருகைதந்ததோடு இம் முறை 30,000 வரையிலான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.  ருஹூனு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்தஆடிவேல் உற்சவம் ஜுலை மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரைநடைபெறவுள்ளதோடு ஒவ்வொருநாள் இரவும் பெரஹர வீதி உலா வரவுள்ளன. மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வோரின் நலன் கருதி அடிப்படை வசதிகளோடு பல்வேறு சுகாதார நலத் திட்டங்களும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

ஹம்பாந்​ேதாட்டை குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...