பௌத்த மதத்துக்கும் தாய் நாட்டுக்கும் எந்தத் தவறும் இழைக்கவில்லை | தினகரன்

பௌத்த மதத்துக்கும் தாய் நாட்டுக்கும் எந்தத் தவறும் இழைக்கவில்லை

நான் பௌத்த மதத்துக்கோ, தாய் நாட்டுக்கோ ஒருபோதும் துரோகமிழைக்கவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே என்மீது வீண் பழியும், குற்றச்சாட்டும் சுமத்தப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நேற்று கண்டி அஸ்கிரிய பீடத்தில் இடம்பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அஸ்கிரிய, மல்வத்தை சியம்நிக்காயக்களின் மகாநாயக்க தேரோக்களுக்கிடையிலான சந்திப்பின் போது தெரிவித்தார். 

போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளேன்.

இன,மத வேறுபாடின்றி  சகலருக்கும் நியாயமாகவே பணிபுரிந்துள்ளேன். பயங்கரவாதம் தலைவிரித்தாடிய காலகட்டத்தில் எனது மாவட்டத்தில் இருந்த 28பௌத்த விகாரைகளையும், அங்கிருந்த மகா சங்கத்தினர்களையும் பாதுகாத்துள்ளேன். அந்த பிக்குமார்களுக்கு எனது சொந்தப்பணத்தின் மூலம் தானம் வழங்கி அவர்களை பாதுகாத்தேன். விகாரைகளை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றினேன். 

நான் ஒருபோதும் பௌத்த தர்மத்துக்கு விரோதமாகச் செயற்படவில்லை. அதேபோன்று நாட்டுக்குத் துரோகமிழைக்கவுமில்லை. குற்றமிழைத்திருந்தால் என்னை விசாரித்து குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால் எந்தத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன். என்மீது பழிவாங்குவதற்காக எனது சமூகத்தை அவமதிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.  

எனது பிரதேசத்தில் தவறிழைத்திருந்தால் மாகா சங்கத்தினர்களான நீங்கள் நேரில் வந்து விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளுமாறும் ரிஷாத் பதியுதீன் மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  

(எம். ஏ. எம். நிலாம்) 


Add new comment

Or log in with...