‘தளபதி 63’ படத்தின் பெயர் ‘பிகில்’ | தினகரன்

‘தளபதி 63’ படத்தின் பெயர் ‘பிகில்’

‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்லியும் விஜய்யும் இணைந்து பணிபுரிவதன் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இந்த வருட தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் இந்த படத்தின் பாடல்களுக்கான இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஐந்தாம் திகதி பதிவு செய்த ஒரு ட்விட்டில் 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் இப்படத்தின் இயக்குனர் அட்லியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் இதுவரை வெளியான படங்களின் பெயர்கள் தெறி, மெர்சல் என்று வைக்கப்பட்டிருந்தது. தளபதி 63படத்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறார் என்று அனைவரும் ஆவலாக உள்ளனர். முன்பு இப்படத்திற்கு மைக்கேல், சிஎம்(கேப்டன் மைக்கேல்) என்று வைக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. பிகில் என்ற அந்த பெயர் இந்தியளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய்யின் புதிய கெட்டப்பில் ஒரு புகைப்படம் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


Add new comment

Or log in with...